சேலம் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவிக்கு
சதாசிவம் எம்.எல்.ஏ. பாராட்டு;
சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி எஸ்.பரணி, 534 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து அந்த மாணவிக்கு மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் கருப்பூர் நகர பா.ம.க. செயலாளர் ரமேஷ், நகர தலைவர் கஜேந்திரன், ஓமலூர் நகர செயலாளர் சாய்சுஜன், வன்னியர் சங்க அமைப்பு செயலாளர் செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.