லாட்டரி சீட்டு டோக்கன் விற்ற 2 பேர் கைது

முத்தூரில் லாட்டரி சீட்டு டோக்கன் விற்ற 2 பேரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2025-06-15 00:51 GMT
முத்தூரில் லாட்டரி சீட்டு டோக்கன் விற்பனை நடைபெற்று வருவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முத்தூர் ஈரோடு சாலையில் குப்புசாமி(வயது 52) என்பவரும், கொடுமுடி சாலையில் சரவணன் (47) என்பவரும் வெளி மாநில லாட்டரி சீட்டு டோக்கன் விற்பனை செய்தது தெரி யவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு டோக்கன் மற்றும் ரூ.4 ஆயிரத்து 490 ஐ பறிமுதல் செய்தனர்.

Similar News