கந்தம்பாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்.

கந்தம்பாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.;

Update: 2025-06-15 14:49 GMT
பரமத்தி வேலூர்,ஜூன்.15: கந்தம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நல்லூர் தனியார் இரும்பு உருக்காலை எதிரில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மணியனூர் பிரிவு ரோடு அருகே உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை கடையில் விற்பனைக்காக வைத்திருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நல்லூரை சேர்ந்த பாலசுந்தரம் மகன் வினோத்குமார், மணியனூரை சேர்ந்த இருதயராஜ் மகன் மகேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்துசாமி தலைமையில் 2 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டன.

Similar News