ஓசூர் அருகே தொழிலாளி தாக்கிய 2 பேர் கைது.

ஓசூர் அருகே தொழிலாளி தாக்கிய 2 பேர் கைது.;

Update: 2025-06-27 01:49 GMT
கிருஷ்ணகிரி ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடியை சேர்ந்தவர் மனோகரன் (33) தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (27), தொழிலாளி, இவருடைய நண்பர் சுரேஷ்குமார் (25). இந்த நிலையில் மனோகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி ஹரீசுடன் தகராறு செய்து வந்ததா கூறப்படுகிறது. கடந்த 24-ஆம் தேதி மனோகரன், ஹரீஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரீஷ் மற்றும் சுரேஷ்குமார், மனோகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில் ஒசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரீஷ், சுரேஷ்குமாரை கைது செய்தனர். இதே போல், ஹரீசின் மனைவி சவுமியா தான் தாக் கப்பட்டதாக ஒரு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மனோகரனை கைது செய்தனர்.

Similar News