மகராஜகடை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது.
மகராஜகடை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை போலீசார் பி.சி.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூ வீலரில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டதில் அவர்கள் 600 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கிருஷ்ணகிரி பி.சி.புதூர் ஜீவபிரசாத் (24) மாட்டுண்ணி பிரதீப் (19) என தெரிய வந்தது. இதை அடுத்து இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்தனர்.