ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்

மெட்ரோ ரயில் பயணச் சீட்​டு​களை ஊபர் செயலி​யில் பெறும் வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்​தில் ஒரு வழித்​தடத்​தில் டிசம்​பர் மாதத்​தில் ரயில்​கள் இயக்​கப்​படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்​குநர் மு.அ.சித்​திக் தெரி​வித்​தார்.;

Update: 2025-08-08 13:58 GMT
சென்னை நந்​தனத்​தில் உள்ள மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கம் மெட்​ரோஸில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சியில் ஊபர் (UBER) செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணச்​சீட்டு பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்​குநர் மு.அ.சித்​திக் தொடங்​கி​வைத்​தார். சென்னை மெட்​ரோ, ஒஎன்​டிசி மற்​றும் ஊபர் நிறு​வனங்​கள் இணைந்து இந்த திட்​டத்தை செயல்​படுத்​தி​யுள்​ளன. இதில் சென்னையில் உள்ள ஊபர் பயனாளர்​கள், க்யூஆர் அடிப்​படையி​லான பயணச்​சீட்​டு​களை பெறு​வதோடு மெட்ரோ பயண தகவல்களை​யும் ஊபர் செயலி​யில் தெரிந்​து ​கொள்​ளலாம். அறி​முகச் சலுகை​யாக இந்த ஆகஸ்ட் மாதம் முழு​வதும் ஊபர் செயலியைப் பயன்​படுத்தி மெட்ரோ பயணச்​சீட்​டு​களை வாங்​கும் பயணி​கள் 50 சதவீதம் தள்​ளு​படி பெறலாம். மேலும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களி​லிருந்து வேறு இடத்​துக்கோ வேறு இடத்​திலிருந்து மெட்ரோ ரயில் நிலை​யம் வரை​யிலோ பயணிக்க ஊபர் செயலி​யில் கார், ஆட்​டோ, பைக் புக் செய்​தால் அதி​லும் 50 சதவீதம் தள்​ளு​படி வழங்​கப்​படும் என தெரிவிக்கப்பட்​டது.

Similar News