கடையநல்லூரில் மணிகண்டன் கொலை; 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மணிகண்டன் கொலை; 2 பேருக்கு ஆயுள் தண்டனை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், 2015 பிப்ரவரி 20 அன்று கடையநல்லூர் அருகே வழிமறித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், மாவடிக்கால் முருகன், கடையநல்லூர் முருகேஸ்வரன் (எ) ஈஸ்வரன், வீ.கே.புதூர் சுப்பிரமணியன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நீதிபதி மனோஜ் குமார், முருகேஸ்வரன் (35) மற்றும் சுப்பிரமணியன் (29) ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ். வேலுச்சாமி ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட முருகன் முன்னரே இறந்துவிட்டார்.