மோப்ப நாய் படை பிரிவிற்கு 2 புதிய நாய்க்குட்டிகள்
தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படை பிரிவிற்கு 2 புதிய நாய்க்குட்டிகள்;
தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படை பிரிவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (25.08.2025) 2 புதிய நாய்க் குட்டிகளை வழங்கி அவற்றை நன்றாக பேணிக்காத்தும் போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்டறியும் நுண்ணறிவு ஆகியவற்றில் திறம்பட விளங்க பயிற்சி அளிக்குமாறு மோப்பநாய் படை பிரிவு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மோப்பநாய் படை பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்ரீகுமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.