சேலத்தில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-08-27 08:30 GMT
சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் இருசாயி (வயது 61). இவர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் கட்டியிருந்த ஒரு ஆடு திருட்டு போனது. இதனால் இருசாயி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. அதேசமயம், ஆடு திருடியவர்கள் அதை மணியனூர் சந்தையில் விற்பனை செய்வார்கள் என இருசாயிக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் மணியனூர் சந்தைக்கு நேற்று காலை சென்று திருட்டு போன ஆடு உள்ளதா? என கண்காணித்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (40), ஹரிகரன் (25) ஆகியோர் இருசாயி வீட்டில் திருடிய ஆட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் இருசாயி மற்றும் உறவினர்கள் பிடித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News