சேலம் அன்னதானப்பட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
போலீசார் நடவடிக்கை;
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அன்னதானப்பட்டி அகரம் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த சபரீஷ் (23), ஹரீஷ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.