ஜெயிலர்-2 படப்பிடிப்புக்காக பாலக்காடு சென்ற ரஜினிகாந்த் !

அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் ஜெயிலர்-2 வெளியாகும் – ரஜினிகாந்த் தகவல்.;

Update: 2025-09-18 07:54 GMT
கோவை விமான நிலையம் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு ஜெயிலர்-2 படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் பயணம் செய்தார். அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர்-2 எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது பாலக்காட்டில் நடைபெற்று வருகிறது. “படம் அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும்” என ரஜினிகாந்த் தெரிவித்தார். “ரசிகர் கூட்டம் தேர்தலில் வாக்காக மாறுமா?” என்ற கேள்விக்கு, “கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.

Similar News