கரூரில் விஜய் மாநாட்டில் உயிரிழந்தவர்களில் 2 பேர் வெள்ளகோவிலை சேர்ந்தவர்கள் - பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த கோகுல பிரியா 29 என்ற பெண்ணும், மணிகண்டன் 33 என்ற இளைஞனும் கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.;
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரை பயணத்தில் நேற்று கரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடும் நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளகோவில் செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்த கோகுல பிரியா (29) என்ற பெண்ணும், வெள்ளகோவில் காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் 33 என்ற இளைஞனும் அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் தவெக உறுப்பினராக உள்ளதாகவும்,கோகுல பிரியாவின் கணவர் ஜெயபிரகாஷ் தவெக உறுப்பினராக உள்ளதாகவும் உள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கூட்டத்திற்கு சென்றதில் உயிரிழந்தவர்களில் இருவருர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் வெள்ளகோவில் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.