திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 காவலர்கள் டிஸ்மிஸ்.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்களை பணிநீக்கம் செய்து திருவண்ணாமலை எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார்.;
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்களை பணிநீக்கம் செய்து திருவண்ணாமலை எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலைய காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் க கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதன் காரணமாக இரண்டு காவலர்களையும் கைது செய்யப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்து திருவண்ணாமலை எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார்.