சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது, 54 மதுபான பாட்டில்கள் பறிமுதல்;

Update: 2025-10-03 12:51 GMT
திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர்கள், சூரியகலா, முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கள்ளிப்பட்டி அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த பாரதி(29), செட்டிநாயக்கன்பட்டி டாஸ்மாக் அருகே மதுபானம் விற்பனை செய்த அருண்பிரசாத்(27) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 54 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News