நீதிமன்றம் குறித்து அவதூறுப் பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-10-19 17:39 GMT
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், அவர் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீஸார் இன்று பிஎன்எஸ் பிரிவு 196 உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News