கிருஷ்ணகிரி: கொலை வழக்கில் 2 பேர் ஆகியோர்குண்டர் சட்டத்தில் கைது.
கிருஷ்ணகிரி: கொலை வழக்கில் 2 பேர் ஆகியோர்குண்டர் சட்டத்தில் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி உட்கோட்டம், கிருஷ்ணகிரி தாலூகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதியபாஞ்சாலியூர், யாசின்நகர், பெத்ததாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள்(48) அவரது மகள் சுசிதா(12) ஆகியோர்களை கடந்த 29.09.2025-ம் தேதி அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலூகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கின் எதிரிகளான காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (21) சத்தியரசு (24), ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரின் உத்தரவின் பேரில் கடந்த 20.10.2025-ம் தேதி மேற்கண்ட வழக்கின் எதிரிகளான நவீன் குமார் மற்றும் சத்தியரசு ஆகியோர்குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.