உத்தனப்பள்ளி அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி 2 பேர் பலி.
உத்தனப்பள்ளி அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி 2 பேர் பலி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பெரிய பேட்டகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் தனுஷ் (19). இவர் நேற்று முன்தினம் டூவீலரில் சென்ற போது சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்ன புலியப்பா (65) என்பவர தனுஷிடம் லிப்ட்கேட்டு டூவீலரில் ஏறி கொண்டார். அப்போது டி.குருபரப்பள்ளி அருகே வளைவில் டூவீலர் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தனுஷ், சின்ன புலியப்பா ஆகியோர் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்ப திவு செய்து சரக்கு வாகன டிரைவர் சிவப்பா (28) என்பவரை கைது செய்தனர்.