ஜெயின் கோயிலில் 20 சவரன் நகை திருட்டு
ஜெயின் கோயிலில் 20 சவரன் நகை திருட்டு
போரூர் அருகே ஜெயின் கோயிலில் 20 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் அருகே காரம்பாக்கம், சமயபுரம் பிரதான சாலையில் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாள்தோறும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயின் கோயிலில் 20 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் சிலையின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த 20 சவரன் நெற்றிச்சுட்டி மாயமாகியுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயின் கோயிலில் 20 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.