ராணிப்பேட்டையில் வாலிபருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை
வாலிபருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை;

ராணிப்பேட்டை மாவட்டம் பெருமூச்சி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(30). இவர் சிறுமி பாலியல் வழக்கில் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.