போக்குவரத்து கழக பணியாளருக்கு வீட்டு மனை ஏப்.20-க்குள் பதிவு செய்ய அழைப்பு

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் கட்டணம் செலுத்தி, ஏப்.20-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.;

Update: 2025-04-07 17:03 GMT
  • whatsapp icon
இது தொடர்பாக பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சங்க உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் கீழ்வலம் கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ள மனை திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் தேவைக்கேற்ப 600 சதுரஅடி ரூ.2.07 லட்சம் முதல் 2,400 சதுரஅடி ரூ.8.28 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கும் மனைக்குரிய தொகையை உடனடியாக செலுத்தி ஏப்.20-ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும். 9 சதவீதம் முத்திரை கட்டண விலக்கு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 2536 0144 என்ற எண்ணை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘2024-25 ஆண்டுக்கான வட்டித் தொகை சங்க உறுப்பினர்களுக்கு நாளை (ஏப்.8) வங்கி மூலம் வரவு வைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News