தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் 20 கி.கி.கைப்பற்றல்
அயோத்தியா-ராமேஸ்வரம் சாரதா விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாருடன் இணைந்து மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்:-;
மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் தலைமையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா உள்ளிட்ட 14 போலீஸார் இணைந்து ரயிலில் சோதனை நடத்தினர். அயோத்தியாவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, சுமார் 20 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அனைத்தையும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.