கிணற்றில் தவறி விழுந்த 20 வயது இளம் பெண்.

கிணற்றில் தவறி விழுந்த 20 வயது இளம் பெண்.;

Update: 2025-11-28 18:14 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு கைகாட்டி அருகே உள்ள சின்ன கோனார் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகள் திவ்யா - 20 இவர் விராலிமலையில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். இந்த நிலையில் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதி அருகே சென்றபோது தவறி சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு கயிற்றின் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பற்றி தகவல் இந்த வளநாடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து இறந்த திவ்யாவின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் இளம் பெண் தவறி விழுந்து இறந்து இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு கைகாட்டி அருகே உள்ள சின்ன கோனார் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகள் திவ்யா - 20 இவர் விராலிமலையில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். இந்த நிலையில் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதி அருகே சென்றபோது தவறி சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அவரது உறவினர்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு கயிற்றின் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பற்றி தகவல் இந்த வளநாடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து இறந்த திவ்யாவின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் இளம் பெண் தவறி விழுந்து இறந்து இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News