ராசிபுரம் அருகே கருப்பசாமி கோவில் திருவிழா.2000க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து..
ராசிபுரம் அருகே கருப்பசாமி கோவில் திருவிழா.2000க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் பகுதியில் அருள்மிகு கருப்புசாமி, அருள்மிகு தாவாயம்மன் கோவிலானது அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த மாதம் ஆடி 21 இன்று திருவிழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, காணிக்கையாக செலுத்தப்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு கறி சமைக்கப்பட்டது. சுமார் 500கிலோக்கு மேல் கறி சமைக்கப்பட்டு, சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆண்,பெண்கள் என இருவருக்கும் சமபந்தி விருந்தானது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து உணவு சாப்பிட்டு சென்றனர்...