கானத்துார் - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை சைக்ளோத்தான் - 2025 போட்டி

கானத்துார் - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை சைக்ளோத்தான் - 2025 போட்டி;

Update: 2025-09-22 06:33 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹெச்.சி.எல்., தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து, கானத்துார் - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை சைக்ளோத்தான் - 2025 போட்டியை, நேற்று நடத்தின.இப்போட்டி, சென்னை அடுத்த, கானத்துார் பகுதியில் துவங்கி, மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி பகுதி வரை, புரொபஷனல் சைக்கிளிங் போட்டியாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற இந்திய, ஆசிய நாட்டு வீரர்கள், வீராங்கணைகள் 50 கி.மீ.,க்கு, நவீன சைக்கிளில் பயணித்தனர். மேலும், அமெச்சூர் சைக்கிளிங் உள்ளிட்ட பிற போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியை நடத்துவதற்காக, அக்கரை - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று காலை ஐந்து மணி நேரம், வாகனங்களுக்கு தடைசெய்யப்பட்டு பழைய மாமல்லபுரம் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

Similar News