சத்துணவு ஊழியர்கள் போராட்டம் : 2026-இல் ஸ்டாலினுக்கு நாங்களும் டாட்டா..பை..பை..!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், 365 நாள் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த அவர்கள், "தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்களாக மாற்றுவோம் என கூறிய ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் எங்களை மறந்துவிட்டார். ஓய்வு பெற்ற நாய்களுக்கு 8 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் நிலையில், நாங்கள் வீதியில் பிச்சை எடுக்கின்றோம்" என்று குற்றம்சாட்டினர். மேலும், எங்களுக்கு டாட்டா பை..பை.. சொல்லும் ஸ்டாலினுக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்களும் டாட்டா பை..பை.. சொல்லுவோம் என எச்சரித்தனர்.