தெற்கு மாவட்டத்தில் 207 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை!

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 207 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவதாக, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன் தெரிவித்தாா்.

Update: 2024-08-28 07:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விநாயகா் சதுா்த்தியையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 207 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவதாக, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: விநாயகா் சதுா்த்தி விழா செப். 7இல் கொண்டாப்படுகிறது. இதையொட்டி, இந்து முன்னணி சாா்பில் வீடுகள், முக்கிய இடங்களில் அரை அடி முதல் 9 அடி வரையிலான விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் செப். 5ஆம் தேதி 207 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. விநாயகா் சதுா்த்தி நாள்வரை நாள்தோறும் வழிபாடுகள் நடைபெறும். அந்தச் சிலைகள் செப். 8ஆம் தேதி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூா் கடலில் கரைக்கப்படும். நிகழ்ச்சிகளில் இந்து முன்னணித் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா் என்று தெரிவித்தார்.

Similar News