அதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
அதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட 103எ கொளத்தூர், புளியணி, அறப்பேடு ஊராட்சியில் அதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கி அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். லும் விடியா திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இந்த திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை கற்பழிப்பு என குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளுடைய போதை வஸ்துக்கள் அதிகமான கலாச்சாரம் உருவாகி உள்ளது. இதைக் கண்டு கொள்ளாத திமுக அரசு அதே போன்று அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசை வெளியேற்ற வேண்டும் என கழக நிர்வாகிகள் இடையே கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு,காஞ்சிபுரம் மண்டலதகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜசேகர்,எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர்சோத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான மா.ஸ்ரீதர்,மாவட்ட விவசாய அணி பிரிவு துணைச் செயலாளர் பூபதி,மாவட்ட இலக்கிய அணி செயலாளர்ஒன்றிய உறுப்பினருமானபொலம்பாக்கம் வழக்கறிஞர்எம்.குணசேகரன்,மற்றும்ஊராட்சி மன்ற தலைவர்கள்பெருங்கருணை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கதிர்வேல்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டலம் மூர்த்தி,அறப்பேடு கிளைக் கழக நிர்வாகிகள் எ.கே.மூர்த்தி, இ.மணி, முத்துகிருஷ்ணன், கணேசன், காத்தவராயன், பாபு, குமரேசன், ஆறுமுகம், உட்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.