ராசிபுரம் அருகே 21ம் ஆண்டாக 33.அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது...

ராசிபுரம் அருகே 21ம் ஆண்டாக 33.அடி ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது...;

Update: 2025-07-24 13:36 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி கொங்கலம்மன் கோவில் பகுதியில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டிகருப்பசாமி கோயில், ஸ்ரீ நாககன்னி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிடிகாசு வழங்குவது வழக்கம். பக்தர்கள் பிடிகாசு வாங்கினால் செல்வம் பெருகும், தீராத கடன்களில் இருந்து விடுபடவும், செய்யும் தொழில் மேன்மை அடையும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் 21ம் ஆண்டு ஆடி அமாவாசை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பிடிக்காசு வாங்கும் நிகழ்ச்சியில் 108 மூலிகைகளை கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க அஷ்டலக்ஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்ற ஹோமங்கள் திருவெள்ளறை ஸ்ரீரங்கம் தலைமை பட்டாச்சாரியார்கள் ரமேஷ், ஸ்ரீராம் பண்டரி, வினோத் பட்டர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், ஆத்தூர், கரூர், ஈரோடு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.. இந்த சிறப்பு ஏற்பாட்டினை ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோவில் பூசாரிகள், நிர்வாகிகள், ஸ்ரீ சண்டி கருப்பசாமி அறக்கட்டளை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்..

Similar News