சேவைக்குறைபாடு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரிக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு

உத்தரவு;

Update: 2025-08-03 08:05 GMT
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த முளையூர் சமத்துவபுரம் பவளமல்லி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமிஜியல். இவருடைய மனைவி கீர்த்தி (வயது 28). இவர் கடந்த 2014 - 2015-ஆம் கல்வியாண்டில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படிக்க விண்ணப்பித்தார். அதன்படி கடந்த 18.7.2024 ஆம் ஆண்டு பொது மருத்துவ செவிலியர் பட்டய படிப்பில் கீர்த்தி சேர்ந்தார். சேர்க்கையின் போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டி.சி. சாதி சான்றிதழ் மற்றும் அசல் ஆவணங்கள் கொடுத்தார். அதோடு இரண்டு ஆண்டு படிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தினார். இந்த நிலையில் கீர்த்தியால் மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தினார். பின்னர் தனது ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ், டி சி உள்ளிட்ட ஆவணங்களை தருமாறு கல்லூரி நிர்வாகத்திலும் கேட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளது. இதையடுத்து கீர்த்தி தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறை தீர்மன்ற தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி ஆகியோர் விசாரித்து கீர்த்தியின் மதிப்பெண் சான்றிதழ்கள், டிசி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எந்த வித நிபந்தனையும் இன்றி ஒப்படைக்குமாறும், கல்லூரி நிர்வாகத்தின் சேவைக் குறைபாட்டுக்காக ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறும், வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இறப்பீடு வழங்குமாறும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் வழக்குரைஞர் உமர்முக்தார் ஆஜராகி வாதாடினார்.

Similar News