திருப்பரங்குன்றத்தில் 22 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் 22ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது;
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் 27ம் தேதி சூரசம்ஹார லீலை நடைபெறவுள்ளது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.