திருப்பரங்குன்றத்தில் 225 திருமண ஜோடிகள் பதிவு.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்வதற்கு 225 திருமண ஜோடிகள் பதிவு செய்துள்ளனர்;

Update: 2025-08-26 12:05 GMT
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வளர்ப்பிறை முகூர்த்தமாக நாளை 27-ந் தேதி நாளை மறுநாள் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி ஆகிய 3 நாட்கள் தொடர் முகூர்த்தம் உள்ளதால் திருமணம் செய்வதற்கு 225 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி, 28-ந் தேதி மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழா நடக்கிறது. ஆகவே திருவிழாவும் திருமணமும், ஒரே நாளில் வருவதால்பக்தர்கள் கூட்டமும், திருமண ஜோடிகளின் கூட்டமும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News