விழுப்புரம் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாமில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கீழ் கூத்தப்பாக்கம் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கிய நிலையில், வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷாமுரளி மாவட்ட கவுன்சிலர் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வானூர் வருவாய் தாசில்தார் நாராயணமூர்த்தி வரவேற்றார்.
இதில் பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து 125 பேருக்கு ரூ.23 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன, முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், வானூர் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், நடராஜன், ஒன்றிய குழு துணை தலைவர் பருவ கீர்த்தனா விநாயகமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.