சேலத்தில் 23-ந் தேதி நடக்கிறது மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
டி.எம்.செல்வகணபதி எம்.பி. தகவல்;
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சேலத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் மாளிகை வீரபாண்டியார் அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் பி.தங்கமுத்து தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.