கரூர்-பழைய பேருந்து கூண்டு பிரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து. 23 பேருந்துகள் எரிந்து நாசம்.
கரூர்-பழைய பேருந்து கூண்டு பிரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து. 23 பேருந்துகள் எரிந்து நாசம்.;
கரூர்-பழைய பேருந்து கூண்டு பிரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து. 23 பேருந்துகள் எரிந்து நாசம். கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியில் முருகன் என்பவர் நடத்தி வரும் தனியாருக்கு சொந்தமான பேருந்து கூண்டு பிரிக்கும் தொழிற்சாலையில் இன்று மதியம் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 50 பேருந்துகள் உள்ள இடத்தில் பணியாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். பணியின் பொழுது எதிர்பாராத விதமாக பற்றிய தீ அருகில் இருந்த பேருந்துகளுக்கும் தீ பரவியது. சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மூன்று வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 23 பேருந்துகள் தீயில் முழுமையாக கருகியது.தீ விபத்துக்கான காரணம் குறித்தும் சேதம் மதிப்பு குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.