பொங்கலூரில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட மாணவரணி அமைப்பினர் கோரிக்கை

Update: 2024-08-28 09:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடம் வட்டம் பொங்கலூரில் ஒன்றிய அலுவலகம் அருகே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை புறக்காவல் நிலையம் இருந்தது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் அக்காவல் நிலையம் அகற்றப்பட்டது. பொங்கலூர் என்பது அவினாசிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட மிக முக்கிய நகர் பகுதியாகும். இங்கு பல வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் என சுமார் 15,000 பேர் வசிக்கின்றனர். பல தொழில் நிறுவனங்களும் உள்ளன.பொங்கலூருக்கும் அவினாசிபாளையம் காவல் நிலையத்திற்கும் சுமார் 12கி.மீ தொலைவு உள்ளது. இப்போது குற்ற சம்பவங்கள் அதிகரித்தும் வருகின்றன. எனவே முன்பு இருந்தது போலவே இங்கு 24 மணிநேரமும் காவலர்களோடு செயல்படும் வகையில் புறக்காவல் நிலையம் அமைத்து "பாதுகாப்பான பொங்கலூர்" உருவாக்கிட வேண்டுமென்ற கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தற்போது பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் சூழலில், இப்போது உள்ள பழைய கட்டிடத்தின் ஒரு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட மாணவர் அணியினர் அவினாசிபாளையம் காவல் ஆய்வாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Similar News