கந்தம்பாளையம் குட்கா பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு சீல். ரூ.25 ஆயிரம் அபராதம்.
கந்தம்பாளையம் குட்கா பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு சீல். ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர், நவ.29: பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பா ளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடை- க்கு உணவு பாதுகாப்புத் துறையி னர் வியாழக்கிழமை 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர். நல்லூர் கந்தம்பாளையத்தில் கிழக்குத் தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமிழக அர சால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்து வருவதாக நல்லூர் காவல் துறையி னருக்கு தசுவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த 22-ஆம் தேதி காவல் ஆய்வாளர் செல்வ ராஜ் தலைமையில் காவலர்கள் அந்த மளிகைக் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில்,கடைக்குள் 9 கிலோ எடை யுள்ள தடை செய்யப்பட்ட பல் வேறு வகையான குட்கா பொருள் கள் பதுக்க வைத்திருந்தது தெரியவந் தது. இதனையடுத்து, நல்லூர் காவல் துறையினர் குட்சா பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையா ளர் ஜெயபாலை (47) கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பரமத்தி வேலூர் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, நல்லூர் காவல் துறையின் உதவியுடன் ஜெயபால் மளிகை கடைக்கு 'சீல்' வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.