சேலம் மாநகராட்சி 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

மாநகராட்சி ஆணையாளர் தகவல்;

Update: 2025-02-22 01:27 GMT
சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் வரும் 25ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு மாமன்ற கூட்டு அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து 12மணிக்கு மாநகராட்சி 2025- 26 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

Similar News