விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 25 கிலோ புகையிலை பொருட்கள்
மயிலாடுதுறை வழியாக சென்றபனாரஸ் ராமநாதபுரம் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 25 கி.கி. எடை உள்ள தம் பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்;
25:03:2025 வண்டி எண் 22536 பனாரஸ்/ ராமநாதபுரம விரைவு வண்டியில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கும்பகோணம் ரயில் நிலையம் வரை முன்பக்கம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் காவல் ஆய்வாளர் தலைமையில் ரோந்து சென்று சோதனை செய்யும் போது கேட்பாரற்று இருந்த பைகளில் சுமார் 25 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் தம் பாக்குகள் இருந்ததை கைப்பற்றி மயிலாடுதுறை நிலையம் கொண்டு வரப்பட்டு உணவுப் பொருள் பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.