மேலப்பாளையத்தில் அழவைத்து சூதாடிய மூவர் கைது.ரூ.250 பறிமுதல்.

மேலப்பாளையத்தில் அழவைத்து சூதாடிய மூவர் கைது.ரூ.250 பறிமுதல்.;

Update: 2025-05-19 12:56 GMT
மேலப்பாளையத்தில் அழவைத்து சூதாடிய மூவர் கைது.ரூ.250 பறிமுதல். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 18ஆம் தேதி மதியம் 3:30 மணி அளவில் மேலப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள காட்டு மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் திருகை கிராமத்தைச் சேர்ந்த அஜய், சிவா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே வடமருதூர் பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250-யும் பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News