ரூ 250 லட்சத்தில் கட்டிய மாநகராட்சி மண்டல அலுவலகத்தை கலந்து வைத்தார் செந்தில் பாலாஜி.
ரூ 250 லட்சத்தில் கட்டிய மாநகராட்சி மண்டல அலுவலகத்தை கலந்து வைத்தார் செந்தில் பாலாஜி.;
ரூ 250 லட்சத்தில் கட்டிய மாநகராட்சி மண்டல அலுவலகத்தை கலந்து வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சி நிர்வாக அலுவலகங்கள் மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் கரூர் மாநகராட்சி வார்டு எண் 2- பசுபதிபுரம் தெற்கு மடவிளாகம், நீர் தேக்க தொட்டி வளாகத்தில் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கரூர் மாநகராட்சியின் மண்டல அலுவலகம் எண் இரண்டு-ஐ முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை திறந்து வைத்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ,துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி உறுப்பினர்கள் , அரசுத்துறை அதிகாரிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் , திமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மண்டல அலுவலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.