மிலாது நபி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
போக்குவரத்து அதிகாரிகள் தகவல்;
சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மிலாது நபி, வார இறுதி நாட்கள் மற்றும் ஆவணி பவுர்ணமியையொட்டி பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை, சேலம், பெங்களூரு, ஓசூர், கோவை, நாமக்கல், திருவண்ணாமலை, ஈரோடு திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது.