சிவன்மலையில் யோக மஹோத்சவம் நிகழ்ச்சி 2500 பேர் பங்கேற்பு

காங்கேயம் ஹார்ட் ஃபுல்னஸ்  இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திய கலாச்சார அமைச்சகம் இணைந்து நடத்தும் யோக மஹோத்சவம் நிகழ்ச்சி;

Update: 2025-02-13 05:04 GMT
சிவன்மலை தைப்பூச தேர் திருவிழாவில் படியூர் சர்வோதய சங்க சிவன்மலை கிளை வளாகத்தில் நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கான எளிமையான யோக பயிற்சிகள் மேலும்பய உணர்வு, பதட்டம் டென்ஷன், மன இறுக்கம், எதிர்மறை சிந்தனைகள், குழப்பம் போன்ற மன ரீதியான பிரச்சனைகள் இருந்து  விடுபடவும், மன நிறைவுடன், மன அமைதியுடனும், மனத்தூய்மையுடன் வாழவும் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட கையாளும் எளிமையான ஓய்வு நிலை பயிற்சி,யோக பிரணாஹீதியுடன் கூடிய தியான பயிற்சி மற்றும் இலவசமாக அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் எஸ் கே செந்தில்குமார், டி. வி. விஸ்வநாத ராவ்  ஆகியோர்  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 15  பயிற்சி ஆசிரியர்களும், 50 தன்னார்வ தொண்டர்களும் இன்றைய நிகழ்ச்சியில் பயிற்சி அளித்தனர். இரண்டு நாட்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், இளைஞர்கள்,மாணவ மாணவியர்கள் இந்த பயிற்சி கற்றுக் கொண்டு பயனடைந்தனர்.

Similar News