தடை செய்யப்பட்ட புகயிலைப் பொருள் விற்பனை ரூ.25,000 அபராதம்
மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல்:- ரூ.25,000 அபராதம் விதித்தும் நடவடிக்கை:-
. மயிலாடுதுறை நகர்ப்பகுதியில் சில கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டதுடன், நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் புஷ்பராஜ் உத்தரவின்படி, மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்தார். இதில், அரசினர் மருத்துவமனை சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான ஹான்ஸ் மற்றும் கூல்லிப் ஆகியன விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரூ.10,000 மதிப்பிலான அப்பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் அக்கடைக்கு மாநில உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுப்படி ரூ.25,000 அபராதம் விதித்ததுடன், கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.