கடலூர் சேடப்பாளையம் ஊராட்சி ஒன்றிய செலவீனத் தொகை 26 லட்சத்தை விடுவிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
கடலூர் ஒன்றியம் சேடப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா தலைமையில் உறுப்பினர்கள் சாந்தி கண்ணகி பாக்கியம் ராஜேந்திரன் விஜயா ராமமூர்த்தி ஞானசேகரன் மாலா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமரிடம் மனு அளித்துள்ளனர் அம் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது கடலூர் ஒன்றிய சேடப்பாளையம் ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக துணை தலைவர் இணக்கமாக செயல்படாத காரணத்தினால் தொடர்ந்து செய்யப்பட்ட பணிகளுக்கான செலவினத்தொகை 26 லட்சத்து 42 ஆயிரத்து 490 இதுவரை விடுவிக்கப்படாமல் இருக்கிறது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி இயக்குனர் ஊராட்சி இவர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்நிலையில் கடந்த 2.5.24 ஊராட்சி நிர்வாகம் செயல்பட கையொப்பமிடும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் அதிகாரம் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணை பிறப்பித்தார் இதனால் ஊராட்சியின் பணிகள் சுனக்கமாகி சரிவர நடைபெறவில்லை இதன் காரணமாக தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதாக 26/7/2024 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் உறுதி அளித்தோம் இம்மனுவை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் 2. 8. 2024 அன்று வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் விசாரணை செய்து தலைவர் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பளிக்க உதவி இயக்குனர் அவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது இதன் பின்னர் உதவி இயக்குனர் ஊராட்சி உத்தரவிற்கு இணங்க 19. 9 .2024 ஊராட்சியில் சிறப்பு கூட்டம் கூட்டி இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றி உதவி இயக்குனரிடம் ஒப்படைத்தோம் ஆனால் இதனால் வரை இது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் கையொப்பமிடும் அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பது தொடர்பாக 19 11 2024 அன்று ஆட்சியர் தலைமையில் நடந்த விசாரணையில் ஊராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் முன்னிணைந்து செயல்படுவதாகும் தற்பொழுது ஊராட்சியில் செயல்படும் தனி அலுவலர் அவர்களை மாற்றி தரவும் என்று கேட்டுக் கொண்டோம் எங்களின் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை தலைவரின் பணி காலங்கள் செய்த செலவீனங்களுக்கு உண்டான ரசீதுகளின் மீது பணம் பெற முடியாமல் உள்ள ரசிதுகளுக்கு ஆட்சியரின் பரிந்துரைக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணத்தை விடுவிக்காமல் உள்ளார் இப்பணத்தை திரும்ப பெற முடியாத நிலை உள்ளது எனவே தயவு செய்து இனிவரும் காலங்களில் கையொப்பமிடும் அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது