
டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.