காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 26 நபர்களுக்கு மோட்ச தீப வழிபாடு
காஷ்மீர் பகல்ஹாமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் 26 பேருக்கு பரசலூர் விரட்டேஸ்வரர் ஆலயத்தில் இந்து புரட்சி முன்னணியினர் மாவட்டத் தலைவர் குமரன் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.;
காஷ்மீர் பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றனர். உயிரிழந்த அப்பாவி பொது மக்களுக்கு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் இந்து புரட்சி முன்னணி சார்பாக மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோதி குமரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் பால வினோத்குமார் ஏற்பாட்டில் ஆலய கொடிமரம் முன்பு தீபங்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் இந்து புரட்சி முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பகவதி குமார், மாவட்ட செயலாளர் கார்த்திக் சுவாமிகள், ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த சித்தன், மற்றும் பொறுப்பாளர்கள் கோயில் அர்ச்சகர்கள், சிவனடியார் பெருமக்கள் பொதுமக்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சிவபுராணம் பாராயணம் பாடப் பெற்று ஆலயத்தில் உள்ள தட்சபுரீஸ்வரர், ஸ்ரீ இளம் கொம்பனையாள் (பாலாம்பிகை) சன்னதிகளில் உலக நன்மை வேண்டியம், தீவிரவாதிகளால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ஆன்மா சாந்தியடைய சிறப்பு வழிபாடு மேற்கொண்டு ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றினர்.