தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி முதல் தேனி துவங்கும் பகுதியான மதுராபுரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2024மே முதல் தற்போது வரை நடைபெற்ற விபத்துக்களில் 26 உயிர்கள் பலியாகி உள்ளனர். இந்த சாலையில் முக்கிய விபத்து பகுதியான சருத்துப்பட்டி- ஜல்லிப்பட்டி பிரிவு சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக ரவுண்டானா அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.