சிவன்மலை முருகன் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை

காங்கேயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது;

Update: 2025-06-18 03:09 GMT
காங்கேயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் கோவில் நிர்வாக ஊழியர்கள் மூலம் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற நிலையில் இம்மாதமும் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரொக்கமும், தங்க நகை 29 கிராமும், வெள்ளி 490 கிராமும் மற்றும் மலேசியா நாட்டு பணங்களும் இந்த உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அறநிலையத்துறை சேர்ந்த கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ராமண சாமி கோவில் உதவி ஆணையர் இளையராஜா, காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள் மற்றும் காங்கேயம் சரக ஆய்வாளர் அபிநயா ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.

Similar News