பழனியில் தைப்பூசத் திருவிழா 26-ம் தேதி கொடியேற்றத்துடன்துவக்கம்

Dindigul;

Update: 2026-01-21 04:01 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 26-ம் தேதி நடைபெறும். பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் 31-ம் தேதி வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், வெள்ளித்தோ் உலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்.1-ஆம் தேதி மாலை தேரடியில் நடைபெறும். நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கொடி இறக்கமும் நடைபெறும்.

Similar News