நியாய விலைக் கடையில் பிப்.28 க்குள் கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்
அரசு செய்தி;
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய் மற்றும் பிஹெச்ஹெச் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து பயனாளிகள் கைவிரல் ரேகை பதிவினை இ-கேஒய்சி (electronic – Know Your Customer) சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் 28.02.2025க்குள் பதிவு செய்திட சென்னை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏஏஒய் மற்றும் பிஹெச்ஹெச் பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 28.02.2025க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, ஏஏஒய் மற்றும் பிஹெச்ஹெச் பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் நியாய விலை கடைகளில் கை விரல் ரேகை பதிவு செய்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.